Wednesday, October 23, 2024

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களில் திங்கள்கிழமை (செப்.30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகம் – இலங்கை இடையே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப்.30) முதல் அக்.5-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, செப்.30-இல் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.30, அக்.1-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 110 மி.மீ. மழை பதிவானது. குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), உசிலம்பட்டி (மதுரை), பழனி (திண்டுக்கல்) – தலா 90, விராலிமலை (புதுக்கோட்டை), கோடநாடு (நீலகிரி), பழனி (திண்டுக்கல்) – தலா 80 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: செப்.30-ஆம் தேதி மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024