Wednesday, November 6, 2024

இன்றைய ராசிபலன் – 06.11.2024

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஐப்பசி மாதம் 20-ம் தேதி புதன் கிழமை

நட்சத்திரம்:இன்று காலை 09.46 வரை மூலம் பின்பு பூராடம்

திதி: இன்று இரவு 10.15 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்:மரண, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.45 – 10.30

நல்ல நேரம் மாலை: 4.45 – 5.45

ராகு காலம் மாலை: 12.00 – 1-30

எமகண்டம் காலை: 7.30 – 9.00

குளிகை காலை: 10.30 – 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 – 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டம்: ரோகினி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வியாபாரிகள் நல்ல லாபம் காண்பர். திருமண பேச்சு வார்த்தை தள்ளிப் போகும். தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

இன்று ரோகினி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம்.கார்த்திகை மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் பணிகளை துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். தொழிலில் பழைய நிலை மாறி முன்னேற்றம் தென்படும். நிதானம் தேவை. காதலர்களுக்கு பொறுமை அவசியம். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கடகம்

வியாபாரிகள் வியாபார யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். அதிவேகத்துடன் வாகனத்தை இயக்க வேண்டாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் கீழ்படிந்து நடப்பர். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். பெற்றோரின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை மேற்கொள்வர். சில கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். பயணத்தின் போது சிறுசிறு விபத்துகளை தவிர்க்க கவனம் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலை தேடுபர்களுக்கு புதிய உத்யோகம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு தங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்

உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி தன் தவறை உணர்ந்து செயல்படுவார். விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள். காதல் கைகூடும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்புகள் வரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

பணவரவு அதிகரிக்கும். உடல் நலம் சிறக்கும். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து செயல்படுவர். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மகரம்

மாணவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு நீங்கும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: கருப்பு, ஊதா

கும்பம்

மாணவர்கள் அன்றைய பாடத்தை படித்துவிடுவர். வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.உடல் நலத்தில் அக்கறை அவசியம். வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024