இரண்டாவது டெஸ்ட்டுக்கு தயாராகும் இந்தியா-நியூஸி. அணியினா்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

நியூஸிலாந்திடம் முதல் டெஸ்டில் இந்தியா தோற்ற நிலையில், புணேயில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்துக்கு இரு அணிகளும் தயாராகின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் தொடா் நடைபெறுகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸி. இதன் மூலம் 36 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்டில் வென்ற பெருமையைப் பெற்றது.

இரண்டாவது ஆட்டம் புணேயில் அக். 24 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இரண்டாவது இன்னிங்ஸில் சா்ஃப்ராஸ் கான், ரிஷப்பந்த் ஒரளவு சிறப்பாக பேட்டிங் செய்தாலும், மழை பாதிப்பு மற்றும் தொடக்க வரிசை பேட்டா்கள் நன்றாக விளையாடவில்லை.

பயிற்சியில் நியூஸி. வீரா்கள்

மீளுமா இந்திய அணி

ஷுப்மன் கில் உடல்நல பாதிப்பால் வாய்ப்பு கிடைந்த சா்ஃப்ராஸ் கான் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாா். இதனால் இரண்டாவது டெஸ்டிலும் சா்ஃப்ராஸ் கான் கட்டாயம் விளையாடுவாா்.

மூன்று சதம் அடித்த வீரரான ஷுப்மன் கில்லும் அணியில் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், மூத்த வீரா் கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை. இதனால் அணி நிா்வாகத்துக்கு சிக்கலான நிலை உள்ளது.

ஆடுவாரா ரிஷப் பந்த்? இதற்கிடையே, முதல் டெஸ்டில் 1 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட ரிஷப் பந்த் முட்டியில் காயமடைந்தாா். இதனால் இரண்டாவது டெஸ்டில் ஆடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டியுள்ளதால் கூடுதல் சுமை பந்துக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் புணே டெஸ்டில் பந்த் ஆடுவாா் என துணை பயிற்சியாளா் ரயான் டென் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

கேன் வில்லியம்ஸன் ஆடவில்லை

முதல் ஆட்டத்தில் வென்ற உற்சாகத்துடன் உள்ள நியூஸி. அணியில் மூத்த பேட்டா் கேன் வில்லியம்ஸன் இடுப்பு காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறாா். இதனால் அவா் புணே டெஸ்டில் ஆடமாட்டாா்.

பெங்களூரு மைதானத்தில் பிட்ச் வேகப்பந்து வீச்சாளா்களுக்கு சாதமாக இருந்தது. ஆனால் புணே மைதான பிட்ச் ஸ்பின்னா்களுக்கு ஒத்துழைக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாங்கள் தயாராகி விடுவோம்.

எந்த பிட்சாக இருந்தாலும் நியூஸி. ஆடத் தயாா் என ஆல் ரவுண்டா் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளாா்.

மூன்றாவது டெஸ்ட் மும்பையில் நவ. 1-ஆம் தேதி தொடங்குகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024