Thursday, November 7, 2024

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம்: உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடைக்கு கீழ் உள்ள வாகனங்களை இயக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி, இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் (எல்எம்வி) பெற்றவர்கள் கார், டாக்சி, ஆட்டோ ரிக்ஷா போன்ற இலகுரக வாகனங்களை மட்டுமே இயக்க முடியும். வணிகத்திற்கு பயன்படும் அதிக எடை கொண்ட வாகனங்களை இயக்க முடியாது.

இதன் அடிப்படையில், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள்(எல்எம்வி), வணிக வாகனங்களை இயக்கி விபத்து நேரும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு காப்பீடு வழங்க மறுத்து வந்தது.

இதையும் படிக்க | அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி!

மேலும், சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுவதற்குக் காரணம், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், வணிக வாகனங்களை இயக்குவதுதான் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், 7,500 கிலோ வரை உள்ள வணிக வாகனங்களை இயக்கலாம் என்றும் நாட்டில் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு இலகுரக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் காரணம் என்பதற்கு தரவுகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.

இதற்கான சட்டத் திருத்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024