Saturday, September 21, 2024

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்; இந்திய அணியில் சிறந்த பீல்டர் விருதை வென்ற வீரர் யார் தெரியுமா..?

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது.

பல்லகெலே,

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலன 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களே எடுத்தது. இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார். இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஒவ்வொரு தொடரின் முடிவிலும், அந்த தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரருக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில் நேற்று முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறந்த பீல்டர் விருதை அதிரடி ஆல்ரவுண்டரான ரிங்கு சிங் கைப்பற்றினார். அவருக்கு இந்திய அணியில் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரியான் டென் டோஸ்கேட் விருது வழங்கி கவுரவித்தார்.

| T20I series win ✅Any guesses on winner of the fielding medal? Find out #TeamIndia | #SLvINDpic.twitter.com/1gzqQcpmuU

— BCCI (@BCCI) July 31, 2024

You may also like

© RajTamil Network – 2024