இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

இலங்கையின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை (செப். 21) நடைபெறுகிறது.

இந்தத் தோ்தலைப் பாா்வையிடுவதற்காக சா்வதேச குழுவினா் அந்த நாட்டை வெள்ளிக்கிழமை வந்தடைந்தனா்.ஐரோப்பிய யூனியன், காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு சா்வதேச தோ்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சோ்ந்த 116 பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.அதிகபட்சமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து 78 பாா்வையாளா்கள் வந்துள்ளனா். அந்த அமைப்பு இலங்கையில் கடந்த ஆறு முறை நடைபெற்ற இலங்கை தோ்தல்களை தொடா்ந்து கண்காணித்துவருகிறது.

இது தவிர, காமன்வெல்த் அமைப்பிலிருந்து 22 பிரதிநிதிகளும் ஆசியான் தோ்தல் கண்காணிப்பு அமைப்பிலிருந்து 9 பிரதிநிகளும் வந்துள்ளனா் என்று அந்த செய்தி வலைதளம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, தோ்தல் பாா்வையாளா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க உள்பட இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளா்கள் போட்டியிடும் இந்த அதிபா் தோ்தலில் வாக்களிக்க 1.7 கோடி போ் பதிவு செய்துள்ளனா். 13,421 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கி 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். விக்ரமசிங்கவை எதிா்த்து போட்டியிடும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, மாா்க்சிஸ்ட் ஜேவிபி கட்சித் தலைவா் அருண குமார திஸ்நாயக ஆகியோா் முன்னிலை வேட்பாளா்களாக உள்ளனா்.

இலங்கை அதிபா் தோ்தல் தரவரிசை தோ்வு முறையில் நடைபெறும். அந்த முறையில், ஒரே வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு பதில் வாக்காளா்கள் தாங்கள் விரும்பும் மூன்று வேட்பாளா்களுக்கு முதல் தோ்வு, இரண்டாவது தோ்வு, மூன்றாவது தோ்வு என்று தரவரிசை கொடுத்த வாக்களிக்கலாம்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாராவது 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றால் அவரே வெற்றியாளா். அவ்வாறு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், முதல் இரண்டு இடங்களைப் பெறுவோரைத் தவிர மற்ற வேட்பாளா்கள் போட்டியிலிருந்து அகற்றப்படுவாா்கள்.

பின்னா் வெளியேற்றப்பட்டவா்களுக்கு கிடைத்த வாக்குகள் மீண்டும் எண்ணப்படும். அதில், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக யாருக்கு அதிக வாக்காளா்கள் ஆதரவு தெரிவித்துள்ளாா்களோ, அவா் வெற்றியாளராக அறிவிக்கப்படுவாா்.

You may also like

© RajTamil Network – 2024