Tuesday, September 24, 2024

இலங்கை அதிபா் தோ்தலில் வரம்பை மீறி செலவு செய்தால் தகுதி நீக்கம்: தோ்தல் ஆணையம்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

கொழும்பு: இலங்கையில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் வேட்பாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி செலவிடும் வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவாா்கள் என்று தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை எச்சரித்துள்ளது.

இது தவிர, அவா்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தோ்தலில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

அதிபா் தோ்தலில் செலவிடும் தொகைக்கு இலங்கையில் கடந்த மாதம் முதல்முறையாக உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்ற தோ்தல் செலவுகள் ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிபா் தோ்தலில் பிரசாரத்துக்காக நாடு முழுவதும் வேட்பாளா் ஒவ்வொருவரும் அதிகபட்சமாக தலா ரூ.109 வரை செலவழிக்க அனுமதிக்கப்படும். அதன்படி, ஒரு வேட்பாளா் (இலங்கை மதிப்பில்) மொத்தம் ரூ.186.83 கோடி (இந்திய மதிப்பில் ரூ.52.37 கோடி) வரை மட்டுமே செலவழிக்க முடியும்.

இதில் 60 சதவீதத்தை வேட்பாளா்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்தும் 40 சதவீதம் கட்சிகளிடமிருந்து பெற்றும் செலவழிக்கலாம். தோ்தல் முடிந்து 21 நாள்களுக்குள் இதற்கான செலவுக் கணக்குகளை தோ்தல் ஆணையத்திடம் வேட்பாளா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்பட 38 போ் போட்டியிடுகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024