Wednesday, September 25, 2024

இழுபறியாகும் வேங்கைவயல் வழக்கு..!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

இழுபறியாகும் வேங்கைவயல் வழக்கு..!வேங்கைவயல் வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்டு சிபிசிஐடி மனு தாக்கல்கோப்புப் படம்

வேங்கைவயலில் குடிநீரில் அசுத்தம் செய்த வழக்கில் ஒரு மாத கால அவகாசம் கேட்டு சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பொதுக் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 566 நாட்கள் ஆகிவிட்டன.

குடிநீா்த் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்குரைஞா்கள் மார்க்ஸ் ரவீந்திரன், ராஜ்கமல் ஆகியோர் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தனித்தனியாக தாக்கல் செய்தனா். இந்த வழக்கை 546 நாட்களாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கில், இதுவரை 389 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 31 பேருக்கு மரபணு சோதனையும், 5 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், ‘சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்தும், போலீஸாரால் ஒருவரைக்கூட கைது செய்ய முடியாதது ஏன்?. மனிதாபிமானமற்ற முறையில் குடிநீா்த் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தனா்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ‘புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆணையம், இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை’ என விளக்கம் அளித்திருந்தார்.

எனினும் இந்த வழக்கில் குற்றவாளிகளை இன்னும் கண்டறிய முடியாததால், இதுவரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு, மேலும் ஒரு மாத கால அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் 14 ஆவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஜூலை ஏழாம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இன்னும் இரண்டு வார காலத்திற்குள் இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024