இவர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டால் ஆஸி.க்கு வெற்றி கிடைக்கும்: கிளன் மேக்ஸ்வெல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது குறித்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு இந்திய அணியும், சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

ஆசியாவின் தலைசிறந்த வீரராக அஸ்வின்..! புதிய சாதனை!

மேக்ஸ்வெல் கூறுவதென்ன?

இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொருத்தே அமையும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஜடேஜா, அஸ்வின்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீண்ட காலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விளையாடியுள்ளோம். அவர்களுக்கு எதிராக நாங்கள் எவ்வாறு விளையாடுகிறோம் என்பது போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக இருந்துள்ளது. அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினால், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் அவர்கள் இருவருக்கு எதிராகவும் அதிகம் விளையாடியுள்ளேன். எங்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்.

8 போட்டிகளில் 5 சதங்கள்..! சாதனை படைத்த இலங்கை வீரர்!

ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக கடந்த 2013 ஆம் ஆண்டு விளையாடியபோது, ஒவ்வொரு நாளும் அவருக்கு எதிராக வலைப்பயிற்சியில் பேட் செய்வேன். அவரை இளம் வீரராக இருந்ததிலிருந்து பார்த்து வருகிறேன். தற்போது அவர் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார் என்றார்.

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் 330 இன்னிங்ஸ்களில் விளையாடி கூட்டாக 821 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதில் 50 ஐந்து விக்கெட்டுகள் அடங்கும்.

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்