Monday, October 21, 2024

இஸ்ரேலுக்கு எதிரான போரில் பின்வாங்கப் போவதில்லை: ஈரான் தலைவர் கமேனி!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

இஸ்ரேலுக்கு எதிரான போரில் பின்வாங்கப் போவதில்லை என்று ஈரானின் உயர் தலைவர் கமேனி தெரிவித்துள்ளார்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் உயர் தலைவரும், ஈரான் மதகுருவான அயதுல்லா அலி கமேனி இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றினார்.

ஈரானின் உயர் தலைவரான கமேனி வெள்ளிக்கிழமை பேசுகையில், ஈரானைச் சுற்றியுள்ள நாடுகள், இஸ்ரேலுக்கு எதிரானப் போரில் பின்வாங்கப் போவதில்லை என்றும், மேலும், ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தொடர்ந்து தங்கள் நாட்டைப் பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது இரண்டாவது முறையாக ஈரான் தாக்குதல் நடத்தியதிற்கு பின்னர் தெஹ்ரானில் ஈரானிய உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி முதல் முறையாக உரையாற்றினார்.

பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது மிகக் கொடூரத் தாக்குதலைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, லெபனானுடனான தனது எல்லையைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது.

ஹிஸ்புல்லா அமைப்பினரால் நடத்தப்பட்ட எல்லை தாண்டிய ஏவுகணைத் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த 60,000 இஸ்ரேலைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வைப்பதே நோக்கம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

லெபனானைச் சுற்றியுள்ள ஹிஸ்பொல்லா தடுப்புகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் 1,000-க்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பொருளாதார நெருக்கடியால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளனர்.

அவர்கள் ஹிஸ்புல்லா தளபதிகள் பலரையும் கொன்றுள்ளனர். ஈரானில் முக்கியமானவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக இயங்கிவந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரத்துல்லாவையும் கொலை செய்துள்ளனர்.

ஃபார்சி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் ஈரானில் அவர் மக்கள் கூட்டத்தின் மத்தியில் அரபி மொழியில் பேசுகையில், “இந்தப் பகுதியில் உள்ளவர்கள் தோல்வியடைந்து போரில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். போரில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்” என்றார்.

ஹிஸ்பொல்லா அமைப்பை பாராட்டிய கமேனி முழு பகுதிக்கும், இஸ்லாமிய உலகிற்கும் ஒரு முக்கிய சேவையை வழங்கி வருகிறது என்றார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1,205 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலில் காஸாவில் 41,788 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024