Friday, September 20, 2024

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் – ஓ.பன்னீர்செல்வம்

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எத்தகையத் தியாகத்தையும் செய்ய துணிந்தவர்கள் என்கின்ற தத்துவத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், இறைக் கட்டளையை ஏற்று தன் தனையனையே இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இறைத் தூதரின் வழியைப் பின்பற்றுவதன்மூலம், நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, துரோகம் ஆகியவை அழிந்து, படிக்கற்களாகத் திகழும் விட்டுக் கொடுத்தல், ஈகை புரிதல், மத நல்லிணக்கம், மனிதநேயம் போன்ற நற்சிந்தனைகள் உருவாகும்.

எனவே, இறைத் தூதரின் தியாகங்களை நெஞ்சில் பதித்து, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் நாம் அனைவரும் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் உறுதி ஏற்போம்."ஒற்றுமையே உயர்வு தரும்" என்பதற்கேற்ப, அனைவர் வாழ்விலும் ஒற்றுமை உணர்வு மேலோங்கிட வேண்டும்; வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எத்தகையத் தியாகத்தையும் செய்ய துணிந்தவர்கள் என்கின்ற தத்துவத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், இறைக் கட்டளையை ஏற்று தன் தனையனையே இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பண்டிகையினை… pic.twitter.com/y5cr7XYXBv

— O Panneerselvam (@OfficeOfOPS) June 16, 2024

You may also like

© RajTamil Network – 2024