ஈரானை தாக்க திட்டமா? அனைத்தும் ஈரான் மக்களின் நலனுக்காகவே… -இஸ்ரேல் பிரதமர்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நிகழ்த்தப் போகிறதா என்கிற வலுத்த சந்தேகத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்படுத்தியுள்ளார்.

ஆம்… ஈரான் மக்களுடன் நேரடியாக பேசியுள்ளார் நெதன்யாகு. “ஈரான் மக்களுக்கு பக்கபலமாக இஸ்ரேல் நிற்கும்” என்று பெஞ்சமின் நெதன்யாகு பேசியிருப்பது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்றிரவு(செப்.30) பேசியிருப்பதாவது; காஸாவையும் லெபனானையும் பாதுகாக்க வேண்டுமென்று ஈரான் தலைமை அந்நாட்டு மக்களிடம் சொல்லி வருவதாகவும், உணர்ச்சிகரமான இத்தகைய உரைகள் மூலம் மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றத்தை ஈரான் தலைமை அதிகரித்து வருவதாகவும் ஈரான் தலைமை மீதான குற்றச்சாட்டுகளை அந்நாட்டு மக்கள் முன் வைத்துள்ளார்.

மேலும், ஈரான் தலைமை, மக்களை படுகுழியில் தள்ளிவிட ஆயத்தமாகி வருவதாகவும் ஈரானிய மக்களை நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

ஈரானிய மக்கள் மீதான அக்கறை தங்கள் நாட்டு தலைமைக்கு இல்லை என்றே பெரும்பான்மையான ஈரானிய மக்கள் கருதுகின்றனர். அப்படி மக்கள் மீது அக்கறையிருந்தால், பில்லியன் கணக்கிலான பெருந்தொகையை மத்திய கிழக்கு பகுதிகளில் போருக்காக செலவழிக்கமாட்டார்கள்.

வெளிநாடுகளில் போரில் செலவழித்துள்ள பணத்தை ஈரானிய குழந்தைகளின் கல்விக்காகவும், சுகாதார கட்டமைப்பிலும், குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் செலவழித்திருக்கலாமே. ஒருவழியாக ஈரான் சுதந்திரமடைந்தால்,மக்களாகிய நீங்கள் எதிர்பார்ப்பதைவிட சீக்கிரமாகவே அந்த தருணம் வரும். அப்போது அனைத்தும் மாறும் என்று ஈரானிய மக்களிடம் வாக்குறுதியளித்துள்ளார் நெதன்யாகு.

இஸ்ரேலுக்கு உறுதுணையாக கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா!

இறுதியாக, பழங்கால மக்களாகிய நாம், யூதர்களும், பெர்சியர்களும் அமைதியக வாழப் போகிறோம். நம் இரு நாடுகளிலும், ஈரானிலும் இஸ்ரேலிலும் அமைதி நிலவும்.

அப்போது, 5 கண்டங்களிலும் ஈரான் தலைமை கட்டமைத்துள்ள பயங்கரவாத கும்பல்கள் சிதைக்கபடும். உலக முதலீடுகள் தொடங்கி சுற்றுலா முதலீடுகள் வரை, ஈரானில் முதலீடுகள் அதிகரிக்கும். வறுமையில் சிக்கித் தவிக்கும் ஈரான் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்குமென பொருள்படப் பேசியுள்ளார்.

இறுதியாக, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற கொலைகாரர்களையும் பாலியல் வன்புணர்வாளர்களையும் ஈரானிய மக்கள் ஆதரிக்கமாட்டீர்கள் என்று தான் நம்புவதாகவும், ஆனால் உங்கள் தலைவர்கள் அதைச் செய்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள்(ஈரானிய மக்கள்) பக்கம் இஸ்ரேல் துணை நிற்கிறது. நாம் ஒன்றிணைந்து வளமையான அமைதியான வருங்காலத்தை தெரிந்துகொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்துக்கு இடமில்லை: இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024