Monday, October 21, 2024

உக்ரைனில் 500 டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

உக்ரைன் எல்லைக்குள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று (அக். 20) குற்றம் சாட்டினார்.

மேலும், 20 வெவ்வேறு வகையான ஏவுகணைத் தாக்குதல், 800 ஏரியல் வெடிகுண்டுகள் மூலமும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி பதிவிட்டுள்ளதாவது,

''அனைத்து நாள்களிலும் எங்கள் நிலைகளின் மீதும் மக்கள் குடியிருப்புகளின் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இது எங்கள் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்.

ரஷிய தீவிரவாதிகள் உக்ரைனின் எல்லைப்பகுதிகளில், இந்த வாரத்தில் மட்டும் 20 வகையான ஏவுகணைகள், 500 டிரோன்கள், 800 வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட உலக நாடுகளால், இந்தத் திட்டமிட்ட தாக்குதலுக்கு எதிராக நிற்க முடியும். நீண்ட திறன் கொண்ட அதிக வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு உக்ரைனுக்குத் தேவைப்படுகிறது. இதைப் புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைத்து நட்பு நாடுகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

உக்ரைன் – ரஷியா போர்

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த 4 மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது.

அந்த மாகாணங்களில் எஞ்சிய பகுதிகளை கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் போரிட்டு வருகின்றன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024