Saturday, September 21, 2024

உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை மேலும் அதிகரிக்க நேட்டோ முயற்சி

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

உக்ரைனுக்கு உதவ நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 லட்சம் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஸ்சல்ஸ்,

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த கூட்டமைப்பில் தற்போது 32 நாடுகள் உள்ளன. இதன் கடைசி உறுப்பு நாடாக சுவீடன் கடந்த மார்ச் மாதம் இணைந்தது. இந்த கூட்டமைப்பில் இணைய உக்ரைனும் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.

ஆனால் சில உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் உக்ரைனால் இன்னும் இணைய முடியவில்லை. இதற்கிடையே உக்ரைனின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா அதன் மீது போர் தொடுத்தது. எனவே உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பல்வேறு உதவிகளை வழங்குகின்றன. அவற்றின் மூலம் உக்ரைனும் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில் நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 லட்சம் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். எனவே ரஷியாவை தனிமைப்படுத்தவும், உக்ரைனுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகளை மேலும் அதிகரிக்கவும் முயற்சிகள் நடைபெறுவதாக நேட்டோ செய்தித்தொடர்பாளர் பரா தக்லல்லாஹ் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024