Friday, September 20, 2024

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

போலந்தில் இருந்து 10 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து, பிரதமர் மோடி உக்ரைன் சென்றடைந்தார்.

கீவ்,

போலந்து நாட்டுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார். 45 ஆண்டு இடைவெளிக்குப் பிறகுபோலந்து வந்த இந்திய பிரதமருக்கு தலைநகர் வார்சாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போலந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும் பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் போலந்து சென்றார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் புறப்பட்டார். ரயில் மூலமாக உக்ரைனுக்கு சென்ற பிரதமர் மோடி, தலைநகர் கீவ்-ல் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று சந்தித்து பேசுகிறார். உக்ரைன் – ரஷ்யா போருக்கு இடையே பிரதமர் மோடியின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024