உடனடியாக பணிக்கு திரும்புங்கள் – மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

“புறக்கணிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்” – மருத்துவர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்"புறக்கணிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்" - மருத்துவர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

அதிகரித்து வரும் டெங்கு, மலேரியா நோய்களை கவனத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக குழு அமைத்துள்ளதாகவும், மாநில அரசுகள் உள்பட மருத்துவ தொழிலில் உள்ள அனைவரும், இந்தக் குழுவிடம் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
Salary Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்? – ரூ.20,000க்கு மேல் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு!

மேலும், பொதுமக்களின் நலனை கவனத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், பணிக்கு திரும்புமாறும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதிகரித்து வரும் மலேரியா, டெங்கு நோய்களை கவனத்தில் கொண்டு பணி புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
central government
,
Doctors Strike

You may also like

© RajTamil Network – 2024