Friday, September 20, 2024

உடல்களை தேடி அலையும் உறவினர்கள்.. கலங்கடிக்கும் வயநாடு

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம்… உடல்களை தேடி அலையும் உறவினர்கள்.. கலங்கடிக்கும் வயநாடுகேரளா நிலச்சரிவு

கேரளா நிலச்சரிவு

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276ஐ கடந்துள்ளது. 200க்கும் அதிகமானோர் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வயநாட்டை அடுத்த சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், உடல்கள் வைக்கப்பட்டுள்ள மேப்பாடி அரசு மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது.

குடும்பத்தை தொலைத்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் என மருத்துவமனையில் யாருடைய உடலாவது இருக்குமா என கண்களில் நீர் ததும்ப அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
வயநாடு கொடுந்துயரம்: பெருமழை, வெள்ளத்தில் சிக்கித்தவித்த பெண்ணின் கடைசி நிமிடங்கள்!

மருத்துவமனைக்கு உடலுடன் ஒரு ஆம்புலன்ஸ் வந்தவுடன், அது யார் என தெரிந்து கொள்ள, அங்கு காத்திருக்கும் மக்கள் அலைமோதுகின்றனர்.

உடல்கள் மொத்தமாக ஒரு அறைக்குள் கண்ணாடிப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்குள், தன்னுடைய குடும்பத்தினர் யாருடைய உடலாவது இருக்குமா என ஒவ்வொரு உடலாக திறந்து பார்த்து கதறும் மக்களின் மனநிலை வார்த்தைகளில் வடிக்க முடியாதது.

அடையாளம் காணப்பட்ட 80-க்கும் மேற்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சூரல்மலையில் உள்ள இடுகாட்டில் அடுத்தடுத்து உடல்கள் எரியூட்டப்பட்டன. குடும்பத்தினர், உறவினர்களை இழந்தவர்கள் இடுகாட்டிற்கு வெளியே நின்று கதறி அழுதனர்.

விளம்பரம்

அதிகமான உடல்கள் வந்ததால், மொத்தமாக வைத்து அவை எரியூட்டப்படுகின்றன. தகனம் செய்யும் பணிக்காக கேரளாவின் பிற பகுதிகளில் இருந்தும் சூரல் மலைக்கு ஆட்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:
வயநாடு நிலச்சரிவு: சூரல்மலையில் ஒன்றாக எரியூட்டப்பட்ட உடல்கள்… கலங்கி நின்ற உறவுகள்!

பல குடும்பங்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்ததால், அருகில் வசித்தவர்கள், வேறு ஊர்களில் வசிக்கும் உறவினர்கள் உடல்களை அடையாளம் கண்டு இறுதிச்சடங்கு செய்து வருகின்றனர். இதற்கு, உதவுவதற்காக தன்னார்வலர்கள் பலரும் இடுகாட்டில் பணியாற்றி வருகின்றனர்.

விளம்பரம்

இந்நிலையில், நடந்து செல்ல பாதை இல்லாத நிலையிலும், 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேலாக ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், தன்னார்வலர்களும் நடந்தே சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் அதிகமானோர் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பெரும் பாதிப்புக்கு உள்ளான முண்டக்கை பகுதிக்கு இயந்திரங்கள், வாகனங்களை கொண்டு செல்வதற்காக, இருவிழிஞ்சி ஆற்றின் குறுக்கே தற்காலிக இரும்புப் பாலம் அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

தற்போதைய நிலையில், கண்டெடுக்கப்படும் சடலங்களை தோளில் சுமந்து வந்து, ஆற்றின் ஒரு கரையில் இருந்து கயிற்றில் கட்டி, மறுகரைக்கு அனுப்பி வருகின்றனர்.

ஆற்றில் வெள்ளம் சற்று குறைந்ததால், தற்காலிக மரப்பாலம் அமைத்து, கிராமத்தில் சிக்கியிருந்த மக்களை முகாம்கள் உள்ள மறுகரைக்கு ராணுவத்தினர் அனுப்பி வைத்தனர்.

வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில், ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணி நடைபெற்றது. ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், மோப்ப நாய்கள் உதவியுடன் வீரர்கள் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kerala
,
Landslide
,
Landslide Death

You may also like

© RajTamil Network – 2024