Wednesday, November 6, 2024

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

ராஞ்சி,

உத்தரகண்ட் மாநிலத்தில் இரும்புக் கம்பியை வைத்து நைனி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் சதி வேலையில் மர்மநபர்கள் ஈடுபட்டனர். பிலாஸ்பூர் மற்றும் ருத்ராபூருக்கு பகுதிகளுக்கு இடையே 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை ரெயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ருத்ராபூர் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்தனின் பேரில் ரெயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் ரெயிலை உடனடியாக நிறுத்தியுள்ளார். பின்னர், தண்டவாளத்தில் இருந்து இரும்புக் கம்பி எடுக்கப்பட்டப் பிறகு, ரெயில் புறப்பட்டுச் சென்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கான்பூரில் அதிவேகமாக வந்த ரெயிலை கவிழ்க்க எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்டவற்றை தண்டவாளத்தில் வைத்து சதி வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் பொருள்கள் இருப்பதைக் கண்ட ஓட்டுநர் ரெயிலை நிறுத்த முயற்சித்தும் சிலிண்டரில் ரெயில் மோதியுள்ளது. நல்வாய்ப்பாக சிலிண்டர் வெடிக்காததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடந்த வாரம், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் ரெயில் தண்டவாளத்தில் தலா 70 கிலோ சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரெயிலை தடம்புரள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபோன்ற ரெயில் கவிழ்ப்பு சதி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

உள்துறை மந்திரி அமித் ஷா கூறுகையில், சிபிஐ, என்ஐஏ, ரெயில்வே காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை நாசவேலைகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ரெயில்வே நெட்வொர்க்கைப் பாதுகாப்பதற்கான திட்டத்தைத் தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024