Wednesday, September 25, 2024

உத்தரபிரதேச ரயில் விபத்து சதிச்செயலா..? ரயில் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

உத்தரபிரதேச ரயில் விபத்து சதிச்செயலா..? ரயில் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!உ.பி.,ரயில் விபத்து

உ.பி.,ரயில் விபத்து

உத்தரபிரதேச ரயில் விபத்து சம்பவத்தில் பெட்டிகள் தடம் புரளும் முன்பாகவே வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படும் நிலையில், ரயில் விபத்து திட்டமிட்ட சதிச்செயலா என கேள்வி எழுந்துள்ளது.

சண்டிகரில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், உத்தரபிரதேசத்தின் கோண்டா அருகே வியாழக்கிழமை பிற்பகல் விபத்தில் சிக்கியது. 6 பெட்டிகள் வரை தடம் புரண்டதாகக் கூறப்படும் நிலையில் இவ்விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30 பேர் காயமடைந்த நிலையில் அதில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

விளம்பரம்

இந்நிலையில், பெட்டிகள் தடம் புரளும் முன்பாகவே வெடிச்சத்தம் கேட்டதாக ரயிலின் லோ பைலட் தெரிவித்துள்ளார். இதனால் ரயில் தடம்புரண்டதன் பின்னணியில் ஏதேனும் நாசவேலை நடந்ததா என பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ரயில் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, தடம்புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்யும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், " இரவு முழுவதும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இன்று காலை 800 ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் சவுமியா மாத்தூர் சம்ப இடத்திற்கு வந்து சூழ்நிலைகளை ஆராய்ந்து வருகிறார்.

விளம்பரம்

இதையும் படிங்க:
ராயல் லுக்கில் கெத்தாக நிற்கும் தஞ்சாவூர் டைடல் பார்க்… 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு…

மின்மயமாக்கப்பட்ட கோண்டா – கோரக்பூர் வழித்தடத்தில் விபத்து ஏற்பட்டதால் மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அறுந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. அதனை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது " என்று தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Train Accident

You may also like

© RajTamil Network – 2024