Wednesday, September 25, 2024

உத்தரப்பிரதேசத்தில் மனிதர்களை ஓநாய்கள் தாக்குவதற்கு இதுதான் காரணமா?

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

உத்தரப்பிரதேசத்தில் மனிதர்களை ஓநாய்கள் தாக்குவதற்கு இதுதான் காரணமா?உத்தரப்பிரதேசத்தில் மனிதர்களை ஓநாய்கள் தாக்குவதற்கு இதுதான் காரணமா?

உத்தரப்பிரதேசத்தின் பெஹராயிச் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் ஏழுக்கும் மேற்பட்ட சிறார்களின் உயிரை காவு வாங்கிய ஓநாய்களில் ஏற்கெனவே 4 பிடிக்கப்பட்ட நிலையில் மேலும் சில ஓநாய்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. திடீரென ஓநாய்கள் ஏன் இப்படி மனிதர்களை தாக்குகின்றன என்ற கேள்விக்கு, அதிர்ச்சியூட்டும் விடை கிடைத்திருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் பெஹராயிச் (Bahraich) மாவட்டத்தில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த மக்களின் தூக்கத்தை கெடுத்த 6 ஓநாய்களில் நான்கு ஓநாய்களை வனத்துறையினர் கூண்டு வைத்து அண்மையில் பிடித்தனர். இருப்பினும், பெஹராயிச் மாவட்டத்தில் சிறார்கள் மீதான ஓநாய் தாக்குதல் குறைந்தபாடில்லை. இரவு நேரங்களில் மனிதர்கள் தூங்கும்போது சிறார்களை மட்டும் குறிவைத்து ஓநாய்கள் தாக்குவதால், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர், கடும் அச்சத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

விளம்பரம்

எந்த திசையில் இருந்து கிராமத்திற்குள் நுழைகின்றன என்று தெரியாததால், இரவு நேரத்தில் மக்கள் விழிப்புடன் வீதிகளில் தடி, கம்பு, கத்திகளுடன் உலா வந்தாலும், திடீரென ஓநாய்கள் சிறார்களை தாக்குவதும், கடித்து இழுத்துச் செல்வதும் தொடர்கதையாக நீடிக்கிறது.

ஆட்கொல்லி ஓநாய்களை பிடிக்க ஆபரேஷன் பெடியா’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட நடவடிக்கையில் முதலில் ட்ரோன்கள் மூலம் ஓநாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பிறகு, அப்பகுதியில் வலைகளும், கூண்டுகளும் வைக்கப்பட்டு 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டன.

பெஹராயிச் மாவட்டத்திற்கு உட்பட்ட 50 கிராம மக்களின் நலன் கருதி, உயிர் பலி வாங்கும் ஓநாய்களை கண்டதும் சுட வனத்துறை முடிவெடுத்துள்ளது.. இதற்கு உ.பி. அரசின் அனுமதியும் கிடைத்துள்ளது.

விளம்பரம்

இதனிடையே, மனிதர்களை தாக்கும் ஓநாய்களை கிராமப் பகுதிகளுக்கு அருகே இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், உ.பி. வனத்துறை பல வியூகங்களை கையாண்டு வருகிறது. யானைகளின் சாணத்தை தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் வாடையால், குறிப்பிட்ட பகுதிக்குள் ஓநாய்கள் வருவதில்லை என்பதை அறிந்து உ.பி. வனத்துறை அதனை செயல்படுத்தி வருகிறது.

இதையும் படிக்க:
பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு தூக்கு தண்டனை – மேற்கு வங்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

அதே நேரம், சிறார்களுக்கு இணையாக உருவம் கொண்ட பொம்மைகளை, கூண்டில் வைத்து அவற்றை கிராமங்களின் எல்லைகளில் வனத்துறை வைத்திருக்கிறது. ஒருவேளை ஓநாய்கள் மனிதர்களை அல்லது சிறார்களை தாக்க கிராமத்திற்குள் வரும்போது, எல்லைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த கூண்டுகளில் சிக்கும் என உ.பி. வனத்துறை நம்புகிறது.

விளம்பரம்

இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பே, இதுபோன்ற ஓநாய் தாக்குதல் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரதாப்கர் மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு 12 சிறார்களை ஓநாய்கள் தாக்கி கொன்றன. இதற்கான பின்னணியை ஆய்வு செய்தபோது, அங்குள்ள ஆற்றங்கரையோரம் இருந்த ஒரு குகையில் இருந்த ஓநாய் குட்டிகளை அப்பகுதி விவசாயிகள் சிலர் அச்சத்தின் காரணமாக தீயில் வீசிக் கொன்றதாகவும், இதனால், ஆத்திரமடைந்த ஓநாய் கூட்டம், அந்த சுற்றுப்பகுதியில் வசித்த மக்களின் குழந்தைகள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தியதும் தெரியவந்தது.

விளம்பரம்

இதையும் படிக்க:
‘ஆபரேஷன் பேடியா’… உ.பி-யை அச்சுறுத்தும் ஓநாய்கள் – கண்டதும் சுட யோகி ஆதித்யநாத் உத்தரவு

இதேபோல், பல்ராம்பூர் மாவட்டத்தில் 2003ஆம் ஆண்டு ஓநாய்கள் அதிகம் வாழ்ந்த வனப்பகுதிகளை விவசாயிகள் தங்கள் சுய லாபத்திற்காக அழித்ததால், அதே பகுதியில் வசித்த சிறார்கள் அதிகளவில் ஓநாய்களால் தாக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவப்பு வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரியமான 7 ஆரோக்கிய நன்மைகள்.!
மேலும் செய்திகள்…

தங்கள் வாழ்விடங்கள் அல்லது தங்களின் குட்டிகளை அழித்த மனிதர்கள் மீது ஓநாய்கள் கடந்த காலங்களில் தாக்குதல் நடத்தியது போல், பெஹராயிச் மாவட்டத்திலும் ஓநாய்களின் கோபத்தை தூண்டும் சம்பவம் ஏதாவது நடந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Forest Department
,
uttar pradesh

You may also like

© RajTamil Network – 2024