Wednesday, November 6, 2024

உத்தர பிரதேசம்: லஞ்சமாக 5 கிலோ உருளைக்கிழங்கு கேட்ட காவலர் சஸ்பெண்டு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சவுரிக் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் ராம் கிரிபால் சிங், அண்மையில் ஒரு வழக்கை முடித்து வைப்பதற்காக விவசாயி ஒருவரிடம் 5 கிலோ உருளைக்கிழங்கு கேட்டு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அந்த ஆடியோவில், விவசாயியிடம் 5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் என்று ராம் கிரிபால் சிங் கேட்பதும், அந்த விவசாயி தன்னால் 2 கிலோ உருளைக்கிழங்குதான் தர முடியும் என்று கூறுவதும், பின்னர் இறுதியாக 3 கிலோ உருளைக்கிழங்கை பெற்றுக்கொள்ள ராம் கிரிபால் சிங் சம்மதம் தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ராம் கிரிபால் சிங்கை சஸ்பெண்டு செய்து கன்னோஜ் மாவட்ட எஸ்.பி. அமித் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024