Tuesday, September 24, 2024

உன்னாவ், ஹத்ராஸ் பற்றி யாரும் பேசுவதில்லை: மமதா கொடுத்த பதிலடி

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், உன்னாவ் மற்றும் ஹத்ராஸ் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, அது பற்றி யாரும் பேசுவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மமதா பானர்ஜி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் பேசிய மமதா பானர்ஜி, உன்னாவ் மற்றும் ஹத்ராஸ் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கப்படவில்லை, ஆனால் அதுபற்றி யாரும் பேசுவதில்லை என்று, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரண்டு சம்பவங்கள் குறித்து பேசினார்.

பாலியல் குற்றங்களைத் தடுக்க அபராஜிதா! மேற்கு வங்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

மேலும், பாரதிய நியாய சன்ஹிதாவை, மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் கொண்டுவந்துள்ளது, தற்போதிருக்கும் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை புதிய சட்ட மசோதா கவனத்தில் கொண்டு திருத்தப்பட்டுள்ளது என்றும் மமதா கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024