உமாபதி ராமையா நடித்துள்ள ‘பித்தல மாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

by rajtamil
0 comment 38 views
A+A-
Reset

மாணிக்க வித்யா இயக்கத்தில் உமாபதி ராமையா நடித்துள்ள திரைப்படம் 'பித்தல மாத்தி'.

சென்னை,

பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா 'அதாகப்பட்டது மகாஜனங்களே' , 'மணியார் குடும்பம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் 'ராஜகிளி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் உமாபதி ராமையா தற்போது 'பித்தல மாத்தி' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தம்பி ராமையா, பால சரவணன், தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மாணிக்க வித்யா இயக்கியுள்ள இந்த படத்துக்கு மோசே இசையமைத்துள்ளார். எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'பித்தல மாத்தி' திரைப்படம் வருகிற 14-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024