Sunday, October 27, 2024

உலகின் அதிக வயது பெண் மரணம்: 115 வயதில்..!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

உலகின் அதிக வயதான பெண்மணியும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலிசபெத் பிரான்சிஸ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் பிரான்சிஸ் (115). அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதான நபராகவும், உலகின் மூன்றாவது வயதான நபராகவும் இருந்தார்.

கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி எலிசபெத் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: வயநாடு மக்களுக்குப் பிரியங்கா எழுதிய கடிதம்..!

1909 ஜூலை 25ல் லூசியானாவில் பிறந்தார். முதலாம் உலகப் போரிலிருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அவர் அனுபவித்தார். ஹூஸ்டனில் காபி கடையை நடத்தி வந்தார். அவர் வாகனம் ஓட்டுவதை விட நடைப்பயிற்சியை விரும்புபவராக இருந்தார். அவர் அமெரிக்காவில் வில்லியம் ஹோவர்ட் டாப்ட் முதல் ஜோ பைடன் வரை இதுவரை 20 அதிபர்களின் ஆட்சியைக் கண்டுள்ளார்.

இந்தாண்டு முற்பகுதியில் தனது 115-வது பிறந்தநாளில் எலிசபெத், நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது குறித்துக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: காஷ்மீர் படப்பிடிப்பில் சந்தித்த பிரச்னைகள்..! விடியோ வெளியிட்ட அமரன் படக்குழு!

இதுதொடர்பாக அவரது பேத்தி கூறியது,

எலிசபெத் பிரான்சிஸ் மக்களை மிகவும் நேசிப்பவர். அவர் எங்களை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துவிட்டர். அவரது மிகவும் நம்பிக்கையுடையவர். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் மிகவும் எளிமையாக தன்னுடைய வாழ்க்கைக் கடந்தவர் என்று அவர் கூறினார்.

நீண்ட ஆயுள் சாதனையாளரான எடி செக்கரெல்லி கலிபோர்னியாவில் தனது 116வது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பிறகு இறந்ததையடுத்து, பிரான்சிஸ் இந்தாண்டு பிப்ரவரியில் நாட்டின் வயதான நபராக முடிசூட்டப்பட்டார்.

முன்னதாக கடந்த 2024 ஆகஸ்டில் உலகின் அதிக வயதான பெண்மணியான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரான்யாஸ் 117 வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024