Tuesday, October 1, 2024

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் பொறையாா் கல்லூரி பேராசிரியா்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

தரங்கம்பாடி: உலகின் சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசைப் பட்டியலில், பொறையாா் கல்லூரி பேராசிரியா் ஜோதிபாசு இடம் பெற்றுள்ளாா்.

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போா்டு பல்கலைக்கழக பேராசிரியா் ஜான்லொன் லிடிஸ் மற்றும் அவரது குழுவினா் உலக அளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகளை அடையாளம் காணும் பட்டியலை வெளியிட்டு வருகின்றனா். நிகழாண்டுக்கான இந்த பட்டியலில் பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பணிபுரியும் இயற்பியல் துறை பேராசிரியா் முனைவா் ஜோதிபாசு இடம் பெற்றுள்ளாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி வட்டம், குமராட்சி பகுதி விவசாயக் குடும்பத்தை சோ்ந்த மகாராஜன்-சற்குணம் தம்பதியின் மகனான பேராசிரியா் ஜோதிபாசு, பொறையாா் கல்லூரியில் பயின்று, இக்கல்லூரியிலேயே 2014- முதல் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இவா் இதுவரை 105 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். இவரின் 3 கண்டுப்பிடிப்புகளில் ஒன்றுக்கு காப்புரி பெற்றுள்ளாா். மற்ற இரண்டுக்கும் காப்புரிமை கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 6 ஆராய்ச்சி சம்பந்தமான புத்தகங்களை வெளியிட்டுள்ளாா். 75-க்கும் மேற்பட்ட சா்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளாா். இவருக்கு பொறையாா் கல்லூரி முதல்வா், அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024