Wednesday, November 6, 2024

உலகில் மிக மோசமானது சாதிய பாகுபாடு: ராகுல் காந்தி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இந்தியாவின் சாதிய பாகுபாடு உலகில் மிக மோசமானவற்றுள் ஒன்று என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சாதி கணக்கெடுப்பு நாட்டிற்கு முன்மாதிரியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மாநில காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கலந்துகொண்டனர். மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் தொண்டர்கள் முன்பு ராகுல் காந்தி பேசியதாவது, இந்தியாவில் சாதிய பாகுபாடு தனித்துவமானது. உலகின் மிக மோசமானவற்றுள் ஒன்றாகக் கூறலாம். மக்களிடையே 50 சதவீத இடஒதுக்கீடு என்ற செயற்கையான தடையை காங்கிரஸ் தகர்க்கும்.

நாட்டில் தாழ்த்தப்பட்டோர் எத்தனைபேர், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு, பழக்குடி மக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை தெரிந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி அச்சப்படுவது ஏன்? நாட்டில் நிலவும் பாகுபாட்டை சரிசெய்ய முயற்சிப்பது குறித்து மோடி பேச மறுப்பது ஏன்?

ஜார்க்கட்ண்டில் பட்டியலினத்தோருக்கு 28 சதவீத இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோருக்கு 12 சதவீதமாக, ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமாக இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என இந்தியா கூட்டணி உறுதி அளித்துள்ளது.

ஏழை மக்களுக்கான இலவச ரேஷன் பொருள்கள் 5 கிலோவிலிருந்து 7 கிலோவாக உயர்த்தி வழங்கப்படும். சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.450ஆக குறைப்போம். மாநிலத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். ஏழை மக்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

தெலங்கானாவில் நாளை (நவ. 6) தொடங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு இம்மாத இறுதிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | உ.பி.யின் மதரஸா கல்விச் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்றம்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024