உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதையும் படிக்க: 3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து அணியை மதிப்பிட முடியாது: ரோஹித் சர்மா

முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 68.06 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில், இந்தியாவை வீழ்த்தியதன் மூலம், நியூசிலாந்து அணி 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

New Zealand's win in first #INDvNZ Test shakes up the #WTC25 standings
More ➡️ https://t.co/aGNt1GAOJApic.twitter.com/FmuwwDwTyZ

— ICC (@ICC) October 20, 2024

62.50 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும், 55.56 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகியவை முறையே 5,6 மற்றும் 7-வது இடங்களில் உள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் 8 மற்றும் 9-வது இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024