உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: வலுவான நிலையில் இந்தியா, சறுக்கிய வங்கதேசம்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் தன்னை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டுள்ளது. வங்கதேச அணி சரிவை சந்தித்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

வலுவான நிலையில் இந்தியா, சறுக்கிய வங்கதேசம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி தனது இடத்தை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டுள்ளது. அதேவேளையில், பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி, வங்கதேச அணியை 6 இடத்துக்கு தள்ளியுள்ளது.

India consolidated their advantage at the top of #WTC25 standings with a comprehensive win in Chennai #INDvBAN : https://t.co/giMNVpnYwvpic.twitter.com/BHlzqHq9ey

— ICC (@ICC) September 22, 2024

வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம், இந்திய அணிக்கு 12 புள்ளிகள் கிடைத்துள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 71.67 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் வலுவாக உள்ளது. 62.50 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 50 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து 3-வது இடத்திலும், 42.86 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி 4-வது இடத்திலும், 42.19 சதவிகித வெற்றிகளுடன் இங்கிலாந்து 5-வது இடத்திலும் உள்ளன.

இயல்பாகவே எனக்கு பேட்டிங் வருகிறது: ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு வங்கதேசம் 39.29 சதவிகித வெற்றிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024