Saturday, September 28, 2024

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கான்பூர் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்படுவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவதற்கான போட்டியை கடினமாக்கியுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 71.67 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் வலுவாக உள்ளது. தனது இடத்தை மேலும் வலுவாக்கிக் கொள்ள இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும்.

மழையால் பாதிப்பு

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (செப்டம்பர் 27) கான்பூரில் தொடங்கியது. முதல் நாளில் மழையால் ஓவர்கள் முழுமையாக வீசப்படமால், 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முதல் நாளில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழலில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது.

இலங்கை அணியின் சுழலில் சுருண்ட நியூசிலாந்து; பிரபாத் ஜெயசூர்யா அபார பந்துவீச்சு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மீதமுள்ள 8 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடலாம். ஆனால், போட்டி டிரா அல்லது வங்கதேசம் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழல் உருவாகும்.

இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்

இரண்டாவது டெஸ்ட் போட்டி தோல்வியிலோ அல்லது டிராவிலோ முடிந்தால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற பல சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரிலும் விளையாடவுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தோல்வியிலோ அல்லது டிராவிலோ முடிந்தால், இந்திய அணி இந்த 8 போட்டிகளில் 5 வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கடினமான சூழலே உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடுவது சந்தேகம்!

5 வெற்றிகள் தேவை என்ற சூழல் உருவானால், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்ற வேண்டும். அதன் பின், கடும் போட்டியாளரான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்திய அணி அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்தை எதிர்த்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது அணிக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்திய அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதேபோல கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போதும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றியது இந்திய அணிக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால், இந்திய அணிக்கு எதிர்வரும் டெஸ்ட் தொடர்கள் மிகவும் சவாலானதாகவே இருக்கப் போகிறது. இந்த சவால்களைக் கடந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சாலை விபத்தில் சிக்கிய இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024