உலக நாட்டுப்புற கலை விழா: தஞ்சையில் நாட்டுப்புற கலைஞர்கள் பிரமாண்ட பேரணி

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

தஞ்சையில் நாட்டுப்புற கலைஞர்களின் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர்,

மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தின் சார்பில் உலக நாட்டுப்புற கலை தின விழா-2024 நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சை முனிசிபல் காலனியில் இருந்து இந்த பேரணி தொடங்கியது. இதில் 800-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் நாட்டுப்புற இசைக்கருவிகளை இசைத்தும், கலைஞர்கள் நடனமாடியபடியும் பங்கேற்றனர்.

நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம் ஈஸ்வரி நகர், மருத்துவக்கல்லூரி சாலை வழியாக தென்னகப் பண்பாட்டு மையத்தை வந்தடைந்தது. பின்னர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட நாட்டுப்புற கலைஞர்களின் வண்ணமயமான கலைநிகழ்ச்சி தென்னகப் பண்பாட்டு மைய திறந்த வெளி கலையரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி அலுவலர் உமாசங்கர் மற்றும் தென்னகப் பண்பாட்டு மைய அனைத்து அலுவலர்களும் செய்திருந்தனர்.

You may also like

© RajTamil Network – 2024