Friday, September 20, 2024

உள்ளூர் முதல் உலகம் வரை – இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்…

by rajtamil
0 comment 37 views
A+A-
Reset

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான கேள்விகள் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அதுதொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்தார். இமயமலை செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

* சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வைகோ நலமுடன் இருப்பதாக வீடியோ பதிவிட்டுள்ளார்.

* டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க கோரும் மனுவை அவசர வழக்காக பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அவரது இடைக்கால ஜாமீன் காலம் 1-ந் தேதி வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.

* பாலியல் புகாரில் சிக்கிய தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வெள்ளிக்கிழமை இந்தியா திரும்புகிறார். ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்ப அவர் விமான டிக்கெட் பதிவு செய்துள்ளார்.

* மராட்டிய மாநிலம் சாங்கிலி அருகே கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றது.

* உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இந்தியா- நேபாளம் இடையே 2 எல்லைசாவடிகளை சீல் வைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது. ஒரு எல்லைசாவடி முழுமையாக சீல் வைக்கப்பட்டது. மற்றொன்றில் மிக முக்கிய அத்தியாவசிய பணிக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

*மத்தியபிரதேசத்தில் ஒருவர் தனது குடும்பத்தை சேர்ந்த 8 பேரை கோடரியால் வெட்டிக்கொன்றார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார். கூட்டுகுடும்பமாக அவர்கள் வசித்து வந்தனர்.

* ரீமெல் புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும்சேதம் ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவு உள்ளிட்டவை காரணமாக இதுவரை 37 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

* காசா முனையில் உள்ள ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024