Sunday, September 22, 2024

உ.பி.யில் பார்லே-ஜி ஃபார்முலா – பாஜக வீழ்ந்தது இப்படித்தானாம்!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

உ.பி.யில் பார்லே-ஜி ஃபார்முலா – பாஜக வீழ்ந்தது இப்படித்தானாம்! நிபுணர்கள் சொன்ன காரணம்அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேசத்தில் 5 ரூபாய் மதிப்பிலான பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட்டை பயன்படுத்திதான், பாஜகவை அகிலேஷ் யாதவ் வீழ்த்தியதாக நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். ஆனால், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெரும் சரிவை கண்டுள்ளது. அங்குள்ள 80 தொகுதிகளில் பாஜக வெறும் 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள நிலையில், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றியது.

விளம்பரம்

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், அயோத்திக்கு உட்பட்ட பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வியடைந்தது, அக்கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜகவின் இந்த தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இதையும் படிக்க:
TDP, JDU மட்டுமல்ல.. அமைச்சர் பதவியை கேட்கும் கூட்டணி கட்சிகள்.. பாஜகவிற்கு தொடரும் நெருக்கடி..

குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாக பலர் கூறுகின்றனர். முதலாவதாக, மோசமாக செயல்பட்ட எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது தற்கொலைக்கு சமம் என்றும், இரண்டாவதாக, பாஜகவின் 400ல் வெற்றி என்ற முழக்கமும் சாமானிய மக்களையும், அரசியல் கட்சிகளையும் விழித்தெழ வைத்ததாக தெரிவித்துள்ளனர். மூன்றாவதாக, உத்தரப்பிரதேசத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், தேர்தல் பத்திர முறைகேடு போன்ற விவகாரங்களை இந்தியா கூட்டணி ஒவ்வொரு பேரணியிலும் எழுப்பியதும் எதிரொலித்ததோடு, உத்தரப்பிரதேச பாஜகவில் நிலவிய கோஷ்டி பூசல் மற்றும் சீட் ஒதுக்கீடு ஆகியவை காரணங்களாக கூறிவருகின்றனர்.

விளம்பரம்

இதை எல்லாவற்றையும்விட, மிக முக்கியமாக ஒவ்வொரு கூட்டத்திலும் அகிலேஷ் யாதவ் பயன்படுத்திய ஆயுதம் தான், பாஜகவின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக கூறப்படுகிறது.

பிரபல நடிகர் சந்தானத்தின் மனைவி யார் தெரியுமா.?
மேலும் செய்திகள்…

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஒவ்வொடு பேரணியிலும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட்டை பணவீக்கத்திற்கு உதாரணமாக காட்டினார். அதாவது, முன்பு 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் எந்த அளவுக்கு பெரியதாக இருந்தது என்பதையும், தற்போது விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் எப்படி இருக்கிறது என்பதையும் உதாரணமாக காட்டினார். பணவீக்கம் காரணமாகவே, பொருட்களின் விலை உயர்ந்து, பிஸ்கட் பாக்கெட் இந்த அளவுக்கு சுருங்கிவிட்டதாக, அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்தார்.

விளம்பரம்

முன்பு ஒரு பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட்டில் எத்தனை பிஸ்கட்டுகள் இருந்தன? இப்போது எவ்வளவு பிஸ்கட்டுகள் இருக்கின்றன? என்பது குறித்து அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியதோடு, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வெறும் பிஸ்கட் பாக்கெட் மட்டும்தான் கிடைக்கும் என்றும் எச்சரித்தார்.

எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிஸ்கட் பாக்கெட்டை வைத்து, பணவீக்கம் குறித்து அவர் மேற்கொண்ட பிரச்சாரம் சாமானிய மக்களிடையே எளிதாக சென்றடைந்தது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, வேட்பாளர் தேர்விலும் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்கும் போதுமான வாய்ப்பு வழங்கியதும் அவரது வெற்றிக்கும், பாஜகவின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்ததாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Akilesh yadav
,
Lok Sabha Election 2024
,
Parle G
,
samajwadi party

You may also like

© RajTamil Network – 2024