உ.பி.யில் ரயில் தடம்புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

உ.பி.யில் ரயில் தடம்புரண்டு விபத்து : 4 பேர் உயிரிழப்பு … பலர் பேர் படுகாயம்!உபி ரயில் விபத்து

உபி ரயில் விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

சண்டிகரில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு சென்ற விரைவு ரயில் இன்று மதியம் கோண்டா நிறுத்தத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கோண்டா மற்றும் ஜுலாஹி ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள பிகவுரா என்ற இடத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

ஜுலாஹி ரயில் நிலையத்திற்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பு பிகரா என்ற இடத்தில் ரயில் தடம் புரண்டது. சண்டிகர் – திப்ருகர் விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் பயணிகள் செய்வதறியாது அலறினர்.

விளம்பரம்

4 ஏசி பெட்டிகள் உட்பட 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விபத்து குறித்து அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா ஷர்மாவிற்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

UP के गोंडा में ट्रेन हादसा, चंडीगढ़ से डिब्रूगढ़ जा रही थी ट्रेन …#UPTrainAccident#ChandigarhDibrugarhExpresspic.twitter.com/q3HJq6qLXT

— News18 Jharkhand (@News18Jharkhand) July 18, 2024

விளம்பரம்

விபத்து குறித்து ஆலோசனை நடத்திய உ.பி., முதலமைச்சர் யோகி அதித்யநாத், சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Dibrugarh Express
,
Train Accident
,
uttar pradesh

You may also like

© RajTamil Network – 2024