Thursday, September 19, 2024

உ.பி.யில் வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் பலி

by rajtamil
0 comment 57 views
A+A-
Reset

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலின் 7வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்கலை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் தொகுதியில் வாக்களிக்க சென்ற 70 வயது முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிகழ்வு வாக்குச்சாவடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிக்கந்தர்பூர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ரவிக்குமார் கூறுகையில்,

"சக் பஹுதீன் கிராமத்தில் வசிக்கும் ரம்பச்சன் சவுகான் (வயது 70) என்பவர் சேலம்பூர் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட கிராமத்தின் தொடக்கப் பள்ளியின் வாக்குச்சாவடி எண் 257க்கு வாக்களிக்க சென்றிருந்தார். வாக்காளர் வரிசையில் சேரும் முன், அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இருப்பினும், வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் போது சவுகான் மயக்கம் அடைந்து மயங்கி விழுந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

You may also like

© RajTamil Network – 2024