Monday, September 23, 2024

உ.பி.யில் வெடித்த உட்கட்சி பூசல்.. நெருக்கடியில் யோகி ஆதித்யநாத்?

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

உ.பி.யில் வெடித்த உட்கட்சி பூசல்.. நெருக்கடியில் யோகி ஆதித்யநாத்? என்ன நிலவரம்?யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்துப் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூடுதல் இடங்களை பெற உதவும் உத்தர பிரதேசத்தில் இம்முறை அக்கட்சி பெரும் பின்னடவை சந்தித்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 36 இடங்களை மட்டும் கைப்பற்றியது. காங்கிரஸ், சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி 43 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு உத்தர பிரதேசத்தில் 64 இடங்கள் கிடைத்த நிலையில், இந்த முறை பெரும் சரிவை சந்தித்தது.

விளம்பரம்

இதனால், மத்தியில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. அத்துடன், உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் 3 ஆவது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை வரை பின்னடைவை சந்தித்ததுடன், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். இதேபோன்று அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியிலும் பாஜக படுதோல்வியடைந்தது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடு காரணமாகத்தான் மக்களவைத் தேர்தலில் பாஜக-விற்கு தோல்வி ஏற்பட்டதாக அக்கட்சியினரே குற்றஞ்சாட்டி வந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து நேற்று முன் தினம் லக்னோவில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா, அரசை விட கட்சிதான் முக்கியம் என்றும் தோல்விக்கு பொறுப்பானவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் பேசினார். இதனால், அம்மாநில பாஜக-வில் நிலவி வந்த உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்தது.

விளம்பரம்

இதையும் படிக்க:
கன்னடர்களுக்கு 100% வேலை வாய்ப்பு வழங்கும் மசோதா நிறுத்தி வைப்பு – கர்நாடக அரசு

இதேபோல பாஜக மாநிலத் தலைவர் பூபேந்திர சவுத்ரிக்கும் ஆதித்யநாத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை பூபேந்திர சவுத்ரி சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பூபேந்திர சவுத்ரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திடீரென ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

விரைவில் உத்தரபிரதேச மாநிலத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மாற்றங்களை செய்ய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், யோகி ஆதித்யநாத் ஆளுநரை சந்தித்துப் பேசியது பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலுக்கு பிறகு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரவும், பாஜக மாநிலத் தலைவராக ஓபிசி சமூகத்தை சேர்ந்தவரை நியமிக்கவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்கவர் கருப்பு நிற லெஹெங்காவில் மயக்கும் நடிகை தமன்னா!
மேலும் செய்திகள்…

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பலவீனமடைந்துள்ளதாகவும், அக்கட்சித் தலைவர்கள் அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்வதாகவும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். அதேநேரம், சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று கேசவ் பிரசாத் மவுரியா பதிலடி கொடுத்துள்ளர.

விளம்பரம்

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். அப்போது உத்தரபிரதேச மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
uttar pradesh
,
Yogi Adityanath

You may also like

© RajTamil Network – 2024