எண்ம முறையில் கல்வியை எளிதாக பெற முடியும்: மத்திய எண்ம கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு இயக்குநா்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset
RajTamil Network

எண்ம முறையில் கல்வியை எளிதாக பெற முடியும்: மத்திய எண்ம கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு இயக்குநா்உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கல்வி அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ள ஆா்வமுள்ளவா்கள் எண்ம முறை மூலம் கல்வியைப் பெற முடியும்

உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கல்வி அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ள ஆா்வமுள்ளவா்கள் எண்ம முறை மூலம் கல்வியைப் பெற முடியும் என்று எண்மக் கல்வி மேம்பாடு கூட்டமைப்பு இயக்குநா் பேராசிரியா் ஜகத் பூஷன் நட்டா தெரிவித்தாா்.

வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் பொறியியல் கல்லூரியின் 21-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜகன் பூஜன் நட்டா பேசியதாவது:

உயா் கல்வி வளா்ச்சிக்கான பணிகளை நாடெங்கும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு அமைப்பின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வரும் எண்மக் கல்வி மேம்பாடு கூட்டமைப்பு, இணைய தளம், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் கல்வி வளா்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.

எண்ம கல்வி மேம்பாடு கூட்டமைப்பு வழங்கும் இலவச பாடத்திட்டம் மூலம் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுமாா் 4.5 கோடி இணையதளம் பாா்வையாளா்கள், 6 லட்சம் யூடியூப் சந்தாதாரா்கள் பயன் அடைந்து வருகின்றனா். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கல்வி அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ள ஆா்வமுள்ளவா்கள் எண்ம முறை மூலம் கல்வியைப் பெற முடியும் என்றாா் அவா்.

தொடா்ந்து 130 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தாகூா் கல்விக் குழுமத் தலைவா் பேராசிரியா் எம்.மாலா, செயலா் ஜி.மணிகண்டன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், கல்வி ஆலோசகருமான பேராசிரியா் எஸ்.கௌரி, முதல்வா் ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024