எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..! தாயின் மறைவு குறித்து கிச்சா சுதீப் உருக்கம்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் வயது முதிர்வு காரணமாக தனது 86ஆவது வயதில் அக்.20ஆம் தேதியன்று காலமானார். இந்த மறைவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கிச்சா சுதீப் கூறியதாவது:

எனது அம்மா, மிகவும் அன்பான, சார்பற்ற, மன்னிக்கும் குணமுடையவர். எனது வாழ்க்கை மதிப்புமிக்கதாகவும் கொண்டாட்டமாகவும் எப்போதும் நினைக்கும்படி செய்தவற்கு காரணமானவர்.

மதிப்புமிக்கவாராக இருக்க காரணம் அவர் மனித உருவத்தில் என்னுடன் இருந்த உண்மையான கடவுள்.

கொண்டாட்ட காரணம் அம்மாதான் எனது திருவிழா. எனது குரு. எனது உண்மையான நலம்விரும்பி. எனது முதல் ரசிகை. எனது மோசமான பணியையும் ரசித்தவர்.

எப்போதும் நினைக்க காரணம் அவர் அழகான நினைவாக இருக்கிறார்.

எனது வலியை வெளிப்படுத்த தற்போது வார்த்தைகள் இல்லை. இந்த வெறுமையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 24 மணி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது.

எனது ஒவ்வொரு காலையும் சுமார் 5.30 மணிக்கு ’காலை வணக்கம் கண்ட’ (சின்னவனே) என்ற குறுஞ்செய்தி இருக்கும். அக்.18 அன்று கடைசியாக அந்த குறுஞ்செய்தி வந்தது. அடுத்தநாள் காலை பிக்பாஸில் இருக்கும்போது அம்மாவின் குறுஞ்செய்தி வரவில்லை. பல ஆண்டுகளில் முதல்முறை. எனது காலை குறுஞ்செய்தியை அனுப்பி எப்படி இருக்கிறீர்கள் எல்லாம் ஓக்கேவா எனக் கேட்க நினைத்தேன். சனிக்கிழமை பிக்பாஸ் கலந்துரையாடல்கள் எனது மொத்த நேரத்தையும் எடுத்துக்கொண்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு அம்மாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக அழைப்பு வந்தது. உடனே எனது சகோதரிக்கு அழைத்து பேசினேன். மருத்துவரிடமும் பேசிவிட்டு மேடைக்குச் சென்றேன்.

மேடையில் இருக்கும்போது அம்மா சீரியஸாக இருப்பதாக தகவல் வந்தது. முதல்முறையாக எந்த உதவியும் இல்லாமல் தவித்தேன். இங்கு சில பிரச்னைகளுடன் சனிக்கிழமை எபிசோட்டிற்கு தயாராகி வந்தேன். அம்மா குறித்தும் பயத்துடனே இருந்தேன்.

கடினமான மன உணர்ச்சிகளில் இருந்தாலும் அமைதியுடன் நிகழ்ச்சியை முடித்தேன். எவ்வளவு பிரச்னைகளிலும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அம்மாவிடம் இருந்து கற்றுள்ளேன்.

சனிக்கிழமை நிகழ்ச்சி முடித்ததும் மருத்துவமனைக்கு விரைந்தேன். எனது அம்மா வென்டிலேட்டரில் இருந்தார். அவர் சுயநினைவுடன் இருந்ததை பார்க்க முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை சில சண்டைகளுக்குப் பிறகு மருத்துவமனை வர சம்மதித்துள்ளார். சில மணி நேரங்களில் எல்லாம் மாறிவிட்டது. இதை எல்லாம் மீண்டும் என்னால் பழையபடி மாற்ற முடியவில்லை. இந்த எதார்த்தத்தை என்னால் எப்படி ஏற்றுக்கொள்வதெனவும் தெரியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு என்னைக் கட்டிப்பிடித்து வழியனுப்பிய எனது அம்மா சில மணி நேரங்களில் மறைந்துவிட்டார். இந்த சோகமான உண்மை எங்கள் மூளையிலும் இதயத்திலும் பதிய இன்னும் நேரமெடுக்கும்.

எனது அம்மா மிகவும் நல்ல குணமுடையவர். நான் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். அம்மாவுக்கு மரியாதை செய்த அனைவருக்கும் நன்றி. எனக்கு குறுஞ்செய்திகள் பதிவுகள் அனுப்பியவருக்கும் நன்றிகள்.

எனது வாழ்க்கையின் மிகவும் மதிப்புமிக்க முத்து போன்ற எனது அம்மா தற்போது இல்லை. அமைதியான இடத்துக்கு சென்றிருப்பார். ஓய்வெடுங்கள் அம்மா. ஐ லவ் யூ. மிகவும் மிஸ் செய்கிறேன் என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024