Monday, October 21, 2024

எதிரணி வீரரை கடித்த கால்பந்து வீரருக்கு ரூ.16 லட்சம் அபராதம்!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

இங்கிலாந்தில் எதிரணி வீரரை கடித்த கால்பந்து வீரருக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ப்ரெஸ்டனுக்கும் பிளாக்பர்னுக்கும் இடையே நடந்த பரபரப்பான கால்பந்து ஆட்டத்தின் போது எதிரணி வீரரைக் கடித்ததற்காக ஒரு கால்பந்து வீரர் மிலுடின் ஒஸ்மாஜிக்கு 8 போட்டிகளில் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 15,000 பவுண்டுகள் (16 லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க..மே.இ.தீவுகளை வீழ்த்தி தெ.ஆ. அசத்தல் வெற்றி!

ப்ரெஸ்டன் வீரரான மிலுடின் ஒஸ்மாஜிக் கடந்த செப்டப்பர் 22 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் பிளாக்பர்ன் தடுப்பாட்டக்காரர் ஓவன் பெக்கை கடித்ததாக தனது மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் கடிக்கப்பட்டதாக நடுவர் மாட் டோனோஹூவிடம் பெக் கூறிய போதிலும், இந்தச் சம்பவத்திற்காக மிலுடின் ஒஸ்மாஜிக் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

போட்டியின் போது இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தி இங்கிலீஸ் கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க..மகளிர் உலகக்கோப்பை: தெ.ஆ. ஜெர்சியில் அன்புக்குரியவர்களின் பெயர்கள்!

பிளாக்பர்ன் அணியின் மேலாளர் ஜான் யூஸ்டேஸ் அந்த நேரத்தில், பெக் ஓஸ்மாஜிக்குடனான மோதலுக்குப் பிறகு அதிர்ச்சியடைந்தார். அப்போது தனது எதிரணி வீரரின் கழுத்தின் பின்புறத்தை கடிப்பது போலத் தோன்றியது.

தகராறில் ஈடுபட்ட ப்ரெஸ்டன் மற்றும் பிளாக்பர்ன் அணியில் இருந்த இரு வீரர்களும் 0-0 கோல் கணக்கில் இருந்த போது போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ப்ரெஸ்டனின் டுவான் ஹோம்ஸை உதைத்ததற்காக பெக்கிற்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. மேலும் அந்தச் சம்பவத்தின் கோபமான வீரர் எதிரணி வீரரை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க..ஸ்மிருதி அக்காவிடம் பிடித்த 2 பண்புகள்..! நியூசிலாந்தை வெல்லும் வழி..! ஷஃபாலி வர்மா பேட்டி!

You may also like

© RajTamil Network – 2024