Monday, September 23, 2024

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தொழில்நுட்ப பிரச்சினையா? – சு.வெங்கடேசன் கேள்வி

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படக் காரணம் என்ன? என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை,

நாடாளுமன்ற மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, தொழில்நுட்ப காரணங்களால் மதுரை எய்ம்ஸ் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களவையில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றிய எந்த விவரமும் இல்லை.

அவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது 'ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதில் தொழிற்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுவிட்டது விரைவில் சரிசெய்து பணிகளை துவக்கிவிடுவோம்' என்றார். மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடைபெறும் பணிகளில் மட்டும் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படக் காரணம் என்ன?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இன்று மக்களவையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா அவர்கள் எய்மஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றிய எந்த விபரமும் இல்லை.
அவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது “ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதில் தொழிற்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுவிட்டது விரைவில்… pic.twitter.com/LJb1bvoyZf

— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 2, 2024

You may also like

© RajTamil Network – 2024