Thursday, November 7, 2024

என்ன செய்யப் போகிறார் டிரம்ப்?!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், தான் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா என்ற கேள்விகள் அமெரிக்க மக்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப், இந்த முறை மீண்டும் களமிறங்கி வெற்றியை தன்வசமாக்கிவிட்டார். குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47 ஆவது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப், தான் வெற்றி பெற்றால் நிறைவேற்றவிருப்பதாக சில வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். அஜென்டா 47 என்ற பெயரில் தனது இணையதளத்தில் டிரம்ப் தெரிவித்த சில வாக்குறுதிகள்..

பள்ளித் தலைவர்களை நியமனம் செய்தல், ஆசிரியர்களின் பணியைப் பொருத்து அவர்களின் பணிக்காலத்தைக் குறைத்தல் முதலானவற்றை மாணவர்களின் பெற்றோர்களே முடிவெடுக்க அனுமதிக்கப்படுவர்.

மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காட்டும் பல்கலைக் கழகங்களுக்கு அபராதம் விதிப்பதன்மூலம், அந்த அபராதத்தினைக் கொண்டு இலவச பயிற்சி மையங்களும் உருவாக்கப்படும்.

இதையும் படிக்க:டொனால்ட் டிரம்ப் 2.0: எப்படி இருக்கப் போகிறது இந்திய – அமெரிக்க உறவு?

2032 ஆம் ஆண்டுக்குள் 67 சதவிகித புதிய வாகனங்களை மின்மயமாக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கவும் திட்டங்கள் மேற்கொள்வதன் மூலம். உலகின் ஆதிக்கம் செலுத்தும் எரிசக்தி உற்பத்தியாளராக அமெரிக்கா உருவெடுக்கும்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல்காரர்கள், மனிதர்களைக் கடத்துபவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

அமெரிக்க உற்பத்தித் துறை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டு இறக்குமதி பொருள்களின் மீதான அடிப்படை கட்டணங்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கொண்ட நாடுகளுக்கு உயர்த்தப்படும் போன்றவற்றை கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப்

இவற்றில் புலம்பெயர்ந்தோர் குறித்தும், கருக்கலைப்பு மீதான பிரச்னைகள்தான் தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. மேலும், அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரைத்தான் அடிக்கடி டிரம்ப் குறிவைத்து தாக்கிப் பேசும் சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.

அவர் அமெரிக்க அதிபராக ஆனபிறகு அமெரிக்காவில் புலம்பெயர்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே கருதப்படுகிறது. லட்சக்கணக்கானோரை நாடு கடத்துதல், அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது போன்ற எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, 7 முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு பயணத் தடையை புதுப்பிப்பதில் புதிய விதிமுறைகள் விரிவுபடுத்துவதும், சட்டவிரோதமாக நாட்டில் வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமை குடியுரிமை வழங்குதலில் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க:அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன்: டிரம்ப் உரை

ஃபிலடெல்ஃபியா நகரில் செப். 11 ஆம் தேதியில் டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தில் பேசிய டிரம்ப், ஓஹையோ மாகாணத்தில் குடியேறிய ஹைதி நாட்டவா்கள் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளைக் கொன்று உண்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு நேர்காணலில் அவர் பேசியதாவது “புலம்பெயர்ந்தோர் அமெரிக்க குடிமக்களின் செல்லப்பிராணிகளைக் கொன்று சாப்பிடுகின்றனர். உள்ளே நுழைந்தவர்கள் அமெரிக்கர்கள் வளர்க்கும் பூனைகளைக் கொன்று சாப்பிடுகின்றனர் என்றார்.

இதனையடுத்து, கடந்த அக். 7 ஆம் தேதியில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பேசிய டிரம்ப் “புலம்பெயர்ந்தோர் கொடூரமான குற்றங்களைச் செய்கிறார்கள், ஏனெனில் "அது அவர்களின் மரபணுக்களில் உள்ளது’’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிரம்ப்பின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நேர்காணலை நடத்திய நிறுவனம் "கொலைகாரர்களைத்தான் டிரம்ப் குறிப்பிடுகிறார், புலம்பெயர்ந்தவர்களை அல்ல" என்று சமாளித்தது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் டிரம்ப்

மேலும், அமெரிக்காவில் தீராத பிரச்னைபோல இருந்து வரும் கருக்கலைப்பு பிரச்னையையும் தீர்த்து வைப்பதாக டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார். கமலா ஹாரிஸுடனான நேரடி விவாதத்தில் பேசிய டிரம்ப் “கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆட்சியில் 9 ஆவது மாதத்தில்கூட கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

சில மாகாணங்களில் குழந்தைகள் பிறந்த பின்னர் கொல்லப்படுகின்றனர். கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாகாணங்களிடம் இருக்க வேண்டும். கடந்த 52 ஆண்டுகளாகவே கருக்கலைப்பு பிரச்னை ஒரு சிக்கலாக உள்ளது.

செயற்கை கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. கருக்கலைப்புக்கு எதிரானது எனது நிலைப்பாடு; இருந்தாலும் மக்களின் கருத்துப்படி செயல்படுவேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் நடத்தி வரும் போரினையும் முடிவுக்கு கொண்டு வந்து விடுவதாகவும் உறுதியளித்திருந்தார்.

இதுதவிர, தான் வெற்றி பெற்றால் டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்குக்கு அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவி அளிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தது தனிப்பட்ட வாக்குறுதி போன்றிருந்தது.

இனிவரும் காலங்களில் தெரிந்து விடும் டிரம்ப்பின் வாக்குறுதிகள், அதிபர் வேட்பாளர் வாக்குறுதிகளா அல்லது அதிபருடைய வாக்குறுதிகளா என்று..

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024