என்ன நடக்கிறது கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கில்?

மம்தா மீது குற்றம்சாட்டும் பெற்றோர்.. விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம் – என்ன நடக்கிறது கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கில்?

கொல்கத்தாவில் இளம் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் மம்தா மீது பெற்றோரின் கோபம் திரும்பியுள்ளது. போராட்டத்தை ஒடுக்க முதலமைச்சர் மம்தா முயற்சிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொல்கத்தாவில் பழமைமிக்க கே.ஜி.கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட நிர்பயாவின் வழக்கிற்கு நிகராக இச்சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏனெனில் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவரே அந்த வளாகத்திலேயே வல்லுறவுக்கு ஆளாகி கொல்லப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

இதில் மாநில அரசின் போக்கு மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே மாநிலத்தின் முதல்வர் மம்தாவே குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தரவேண்டும் எனக் கூறி பேரணி நடத்தினார்.

இதையும் படிக்க:
வயநாடு நிலச்சரிவு கோரம் : அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!

இவ்வழக்கு தொடர்பாக அங்கு தன்னார்வலராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், கேஜி கர் மருத்துவக் கல்லூரியில் முதல்வராக இருந்த சந்தீப் கோஷிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

பலியான மருத்துரின் கண்களில் ரத்தம் வழிந்ததும், கால்கள் உடைந்திருப்பதையும் பார்த்தால் இதில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு தொடர்பு இருந்திருப்பது புலனாகிறது என்கின்றனர் சக ஊழியர்கள்.

இந்நிலையில் பெண் மருத்துவரின் தாயும் தந்தையும் தங்களுக்கு அரசின் நிதி வேண்டாம் என ஒதுக்கிவிட்டு நீதி வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து வந்த அழைப்பில் உடல் நிலை சரியில்லை என்றுதான் முதலில் கூறியதாகவும் ஆனால் அங்கு போனபின்தான் உண்மை தெரிந்தது என்றும் பார்த்ததுமே அது கொலையெனத் தெரிந்துவிட்டதாகவும் தாய் வேதனையுடன் கூறியுள்ளார்.

விளம்பரம்
உங்கள் சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கும் 9 மூலிகைகள்.!
மேலும் செய்திகள்…

மேலும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாரென்றும் ஆனால் அவர் சொன்னபடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தாயும், தந்தையும் குற்றம்சாட்டியுள்ளனர். கண்டனப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் 144 தடை உத்தரவை முதல்வர் மம்தா பிறப்பித்ததுடன், உயிரிழந்த மகளுக்கு சீக்கிரம் உடற்கூறாய்வு செய்து உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் என அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சிபிஐ சேகரித்து அனுப்பப்பட்ட மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வின் இறுதி அறிக்கை மத்திய தடயவியல் ஆய்வகத்திலிருந்து வரும் புதன்கிழமை வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதனிடைய புகழ்வாய்ந்த கால்பந்து கிளப்களான மோகன் பகானும், ஈஸ்ட் பெங்கால் அணிகளும் மோதிய சால்ட் லேக் மைதானத்தின் வெளியே போராட்டம் வெடித்தது. வியப்பூட்டும் வகையில், பரம எதிரிகளான இருதரப்பு ரசிகர்களும் ஒன்றிணைந்து பெண் மருத்துவர் கொலையில் நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க:
திருப்பதி தேவஸ்தான அலுவலக தீ விபத்து… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசார் திடீரென தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். அதனால் அந்த பகுதியே கலவர பூமியாக மாறியது.

விளம்பரம்

இதனிடையே வழக்கின் தீவிரத்தை உணர்ந்து உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இவ்வழக்கை நாளை விசாரிக்கவுள்ளது. ஒருபக்கம் சிபிஐ விசாரணை மறுபுறம் உச்சநீதிமன்ற விசாரணை என வழக்கு வேகமெடுத்துள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kolkata
,
Kolkata Doctor Murder Rape
,
mamta banerjee

Related posts

Pakistan: 7 Labourers From Multan Killed In Terrorist Attack In Balochistan’s Panjgur

Kerala Launches New Entrance Training Programme Benefiting Over 8 Lakh Students

AI Express-AIX Connect Merger In October First Week; ‘I5’ To Fly Into Sunset