Thursday, October 31, 2024

எல் அண்ட் டி லாபம் 5% உயர்வு!

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset

புதுதில்லி: உள்கட்டமைப்பு நிறுவனமான, ‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனம், 2024 செப்டம்பா் காலாண்டில், வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், 5 சதவிகிதம் அதிகரித்து ரூ.3,395 கோடியாக உள்ளது.

இதுகுறித்து எல் அண்ட் டி நிறுவனம் பங்குச் சந்தை ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.3,223 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: டாடா பவர் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 8% அதிகரிப்பு!

செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனம் ரூ.3,395 கோடி வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபத்தை பதிவு செய்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மதிப்பீட்டு காலத்தில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.52,157.02 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.62,655.85 கோடியானது. அதே வேளையில் செப்டம்பர் காலாண்டில் அதன் செலவினம் ரூ.47,165.95 கோடியிலிருந்து ரூ.57,100.76 கோடியாக அதிகரித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024