Wednesday, November 6, 2024

எஸ்.சி., எஸ்.டி பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமீலேயர் கிடையாது: மத்திய அமைச்சரவை முடிவு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

புதுடெல்லி,

பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்களுக்கான விலக்கு அளிக்கும் நடைமுறை (கிரீமிலேயா்) எதுவும் கொண்டுவரப்படாது என நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடா்பாக சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் அளித்த தீா்ப்பு தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.அரசமைப்பு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

அந்த வகையில், சட்டமேதை அம்பேத்கா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு இடஒதுக்கீட்டில், சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்கள் பலன் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இதுவே மத்திய அமைச்சரவையின் முடிவாகும் என்றார்.

You may also like

© RajTamil Network – 2024