Friday, September 20, 2024

ஏக்நாத் ஷிண்டேவுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு: மராட்டிய அரசியலில் பரபரப்பு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. பின்னர் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி தனது ஆட்சியை தக்கவைத்தது.

ஆனால் திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றிய அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல் மந்திரியாக உள்ளார்.

மராட்டியத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்த இந்தியா கூட்டணி கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்ரேவுடன் கூட்டணி வைத்துள்ள சரத் பவார் இன்று திடீரென சந்தித்து பேசினார். இன்னும் சில மாதங்களில் மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024