ஏர்போர்ட் போன்ற வசதிகளுடன் தயாராகி வரும் செர்லப்பள்ளி ரயில் முனையம்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

ஏர்போர்ட் போன்ற வசதிகளுடன் தயாராகி வரும் செர்லப்பள்ளி ரயில் முனையம்! எப்போது திறப்பு?ஏர்போர்ட் போன்ற வசதிகளுடன் தயாராகி வரும் செர்லப்பள்ளி ரயில் முனையம்! எப்போது திறப்பு?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செர்லப்பள்ளி (Cherlapalli ) ரயில் முனையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாதமே ரயில் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ரூ.430 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் முனையத்தில் விமான நிலையங்களில் உள்ளதை போன்ற நவீன வசதிகள் உள்ளன.தற்போது செகந்திராபாத், ஹைதராபாத், கச்சேகுடா ஆகிய ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், புதிதாக திறக்கப்பட உள்ள செர்லபள்ளி ரயில் முனையத்தில் இருந்து பல ரயில்கள் புறப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

இதனிடையே கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள லிங்கம்பள்ளி நிலையமும், ரயில் முனையமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதனிடையே புதிய செர்லப்பள்ளி ஸ்டேஷன் கட்டிடம் பற்றி கூறுவதென்றால், இந்த ரயில் முனையம் நவீன கட்டிடக்கலை வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ரயில் டெர்மினலில் மொத்தம் ஆறு புக்கிங் கவுன்ட்டர்ஸ், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி காத்திருப்பு பகுதி, அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ஏரியா மற்றும் தரை தளத்தில் ஒரு நிர்வாக ஓய்வு அறை (executive lounge) உள்ளிட்டவை அடங்கும்.

விளம்பரம்

தெற்கு மத்திய ரயில்வே (SCR) அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த முனையத்தின் முதல் தளத்தில் கேஃபிடேரியா , ரெஸ்டாரன்ட், தாய்மார்களுக்காக ஃபீடிங் ரூம்ஸ் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமான ரெஸ்ட்ரூம்ஸ் இருக்கும். செர்லபள்ளி ரயில் முனைய வடிவமைப்பில் விசாலமான கான்கோர்ஸ் ஏரியாக்கள் மற்றும் நவீன, ஒளிரும் முகப்பு ஆகியவை அடங்கும். இந்த நிலையம் MMTS இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

புதுப்பிக்கப்பட்ட நிலையத்தில் நான்கு கூடுதல் ஹைலெவல் பிளாட்ஃபார்ம்ஸ் இருக்கும், மேலும் தற்போதுள்ள ஐந்து நடைமேடைகள் முழு நீள ரயில்களுக்கு இடமளிக்கும் வகையில் நீட்டிக்கப்படும். அதே போல பிளாட்ஃபார்ம்ஸ்களுக்கு இடையே எளிதாக செல்ல அனுமதிக்கும் வகையில், 12 மீட்டர் அகலமும், 6 மீட்டர் அகலமும் கொண்ட இரண்டு புதிய ஃபுட் ஓவர் பிரிட்ஜ் அமைக்கப்படும்.9 பிளாட்ஃபார்ம்ஸ்களிலும் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட் இருக்கும். அங்கிருந்து புறப்படும் ரயில்களுக்கான பெட்டி பராமரிப்பு வசதிகளும் இந்த நிலையத்தில் இருக்கும்.

விளம்பரம்

மூத்த SCR அதிகாரி ஒருவே பேசுகையில், செர்லப்பள்ளி ரயில் நிலையம் மிகப்பெரிய பெரிய பயணிகள் முனையமாக மாறும். மேலும் விமான நிலையங்களுக்கு இணையாக நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் இந்த புதிய முனையம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றார். புதிய ரயில் முனையம் செகந்திராபாத், நம்பள்ளி மற்றும் கச்சேகுடா ரயில் நிலையங்களின் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல், நகரில் வசிக்கும் மக்களின் அதிகரித்து வரும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்று அந்த அதிகாரி விளக்கினார். முக்கியமாக இந்த ரயில் முனையம் வெளிவட்டச் சாலை மற்றும் வரவிருக்கும் பிராந்திய சுற்றுச் சாலை (RRR) ஆகியவற்றுக்கு அருகாமையில் இருப்பது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

Also Read |
பூமியின் மிகத் தொலைதூர இடம் எது தெரியுமா? மர்மங்கள் புதைந்திருக்கும் ‘பாயிண்ட் நெமோ’-க்கு சென்ற ஒரே ஒரு நபர்!

புதிய செர்லப்பள்ளி ரயில் முனையத்தின் சிறப்பம்சங்கள் சுருக்கமாக…

– 6 புக்கிங் கவுன்டர்ஸ்

– 4 கூடுதல் ஹை-லெவல் பிளாட்ஃபார்ம்ஸ்

– 2 புதிய ஃபுட் ஓவர் பிரிட்ஜ் (12 மீட்டர் மற்றும் 6 மீட்டர் அகலம்)

9 நடைமேடைகளிலும் எஸ்கலேட்டர்ஸ் மற்றும் லிஃப்ட்ஸ்

– ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வெயிட்டிங் ஹால்ஸ்

– அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ஏரியா

விளம்பரம்

– Cafeteria, ரெஸ்டாரன்ட் மற்றும் ஃபீடிங் கேபின்ஸ்

– ரயில் புறப்படுவதற்கான பெட்டி பராமரிப்பு வசதிகள்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Hyderabad
,
Railway Station

You may also like

© RajTamil Network – 2024