5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது
மும்பை,
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் நாளை கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி என 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது. 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது. அதில் கிளாசென் ரூ.23 கோடி, பாட் கம்மின்ஸ் 18 கோடி, அபிஷேக் சர்மா ரூ.14 கோடி, டிராவிஸ் ஹெட் ரூ. 14 கோடி, நிதிஷ் ரெட்டி ரூ. 6 கோடிக்கு தக்கவைத்துள்ளது.
இருப்பினும், ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி வசம் ரூ.45 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும். வெறும் 45 கோடியில் 18-20 வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.