Tuesday, September 24, 2024

ஐபிஓ மூலம் ரூ.900 கோடி நிதி திரட்ட ஹீரோ மோட்டார்ஸ் முடிவு!

by rajtamil
Published: Updated: 0 comment 18 views
A+A-
Reset

புதுதில்லி: ஹீரோ மோட்டார்ஸ் குழுமத்தின் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனமானது ஐ.பி.ஓ. வாயிலாக, ரூ.900 கோடி திரட்ட, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.

ஆஃபர் ஃபார் சேல் வழியாக ரூ.400 கோடி மதிப்புள்ள பங்குகள் ப்ரோமொடேர்ஸ் இடமும், ஐபிஓ வாயிலாக ரூ.500 கோடி மதிப்புள்ள புதிய ஈக்விட்டி பங்குகள் வெளியிடுவதும் இதில் அடங்கும். ஓ.பி. முன்ஜால் ஹோல்டிங்ஸ்க்கு ரூ.250 கோடி பங்குகளும், பாக்யோதே இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஹீரோ சைக்கிள்ஸ் தலா ரூ.75 கோடி பங்குகளும் இந்த ஆஃபர் ஃபார்-சேலில் அடங்கும்.

புதிய வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.202 கோடி கடன் செலுத்துவதற்கும், ரூ.124 கோடி உத்தரபிரதேசத்தின் கௌதம் புத்த நகரில் உள்ள நிறுவனத்தின் ஆலையின் திறனை விரிவுபடுத்துவதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும்.

இரு சக்கர வாகனங்கள், இ-பைக்குகள், ஆஃப்-ரோடு வாகனங்கள், மின்சார மற்றும் ஹைபிரிட் கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகன பிரிவுகளுக்கான மின்சார மற்றும் மின்சாரம் அல்லாத பவர்டிரெய்ன்களை ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் பவர்டிரெய்ன் சொல்யூஷன்ஸ் மற்றும் அலாய் மற்றும் மெட்டாலிக்ஸ் என இரண்டு பிரிவுகளில் இயக்கி வருகிறது.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், டிஏஎம் கேபிடல் அட்வைசர்ஸ் மற்றும் ஜேஎம் பைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் இந்த ஐபிஓ வெளியீட்டிற்கு வழி நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024