Saturday, September 21, 2024

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்குமா குரோஷியா..? – ஸ்பெயினுடன் இன்று மோதல்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நேற்று தொடங்கியது.

பெர்லின்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்2 அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் போட்டியின் 2-வது நாளான இன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு பெர்லினில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அல்வரோ மோரட்டா தலைமையிலான ஸ்பெயின் அணி, லூகா மோட்ரிச் தலைமையிலான குரோஷியாவுடன் (பி பிரிவு) மல்லுகட்டுகிறது. குரோஷியா கடந்த ஆண்டு நேஷன்ஸ் லீக் இறுதி சுற்றில் ஸ்பெயினிடம் போராடி தோல்வி அடைந்தது. அதற்கு பழிதீர்க்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டுகிறது.

இவ்விரு அணிகள் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் ஸ்பெயினும், 3-ல் குரோஷியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது. மற்ற ஆட்டங்களில் ஹங்கேரி-சுவிட்சர்லாந்து (மாலை 6.30 மணி), இத்தாலி- அல்பேனியா (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.

You may also like

© RajTamil Network – 2024