ஐஸ்லாந்தின் புதிய அதிபராக ஹல்லா தோமஸ் டோட்டிர் தேர்வு

by rajtamil
Published: Updated: 0 comment 70 views
A+A-
Reset

தோமஸ்டோட்டிர் 34.6 சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டின் இரண்டாவது பெண் அதிபரானார்.

ரெக்ஜாவிக்,

ஐஸ்லாந்து நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பெண் தொழில் அதிபரான ஹல்லா தோமஸ் டோட்டிர் மற்றும் முன்னாள் பிரதமர் கேத்ரின் ஐாகோப்ஸ்டோட்டிர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஹல்லா தோமஸ்டோட்டிர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்,

இதன்படி ஐஸ்லாந்து நாட்டின் புதிய மற்றும் இரண்டாவது பெண் அதிபராக ஹல்லா தோமஸ் டோட்டிர் பதவியேற்க உள்ளார். 55 வயதான தோமஸ் டோட்டிர் 34.3 சதவீத வாக்குகளும், 48 வயதான ஜாகோப்ஸ்டோட்டிர் 25.5 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

இதனையடுத்து ஹல்லா தோமஸ் டோட்டிர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக கடந்த 1980ம் ஆண்டில் விக்டிஸ் பின்னபோகாடோட்டிர் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024