Friday, September 20, 2024

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் 881 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் 859 புள்ளிகள் பெற்று நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 3-வது இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் ஹாரி புரூக் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5வது இடத்திலும் நீடிக்கிறார்கள். 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் 9வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

இந்தியாவின் ரோகித் சர்மா 6-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்திலும், விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 18-வது இடத்தை பிடித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024